விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு
இலங்கை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசு வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் வழக்கு இது.






















