• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடைசி படம், டி.எம்.எஸ் பாடல் பிடிக்காமல் இளையராஜாவை பாட சொன்ன எம்.ஜி.ஆர்

சினிமா

கடைசி படம், டி.எம்.எஸ் பாடல் பிடிக்காமல் இளையராஜாவை பாட சொன்ன எம்.ஜி.ஆர்; வாலி சொன்ன வரலாறு!

எம்.ஜி.ஆர் தனது கடைசி படத்தில் டி.எம்.எஸ் பாடல் பிடிக்காமல் இசையமைப்பாளர் இளையராஜாவை பாட சொல்லியுள்ளார்.

வாலிப கவிஞர் என்று அழைக்கப்படும் கவிஞர் வாலி, எம்.ஜி.ஆர் முதல் அஜித் வரை பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவரது பாடல்கள் இன்று கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடலாக அமைந்துள்ளது. கவிஞர் வாலி பாடல்கள் மட்டுமல்ல எம்.ஜி.ஆரை வைத்து படமும் இயக்கியுள்ளார். ‘உன்னை விடமாட்டேன்’ என்ற அந்த படம் கடைசி வரை ரிலீஸாகவே இல்லை.

இந்நிலையில், எம்.ஜி.ஆரின் கடைசி படமான ‘உன்னை விடமாட்டேன்’ படத்தில் டி.எம்.எஸ் பாடல் பிடிக்காமல் இளையராஜாவை எம்.ஜி.ஆர் பாடச் சொல்லியுள்ளார். இதுகுறித்து, கவிஞர் வாலி நேர்காணலில் கூறியதாவது,

“எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருக்கும் பொழுது திடீரென்று ஒருநாள் நான் படத்தில் நடிக்கப்போகிறேன் என்று கூறினார். அப்போது நான் அவரை சென்று பார்த்தேன். அப்போது எம்.ஜி.ஆர், நான் படத்தில் நடிக்கப்போகிறேன் நீங்களே அதற்கு கதை, வசனம் எல்லாம் எழுதுங்கள் என்று சொன்னார்.

அதன்பிறகு அவரே இந்த ‘அன்னக்கிளி’ படத்திற்கு இசையமைத்த பையனை போடலாமா? என்று கேட்டார். நானும் இளையராஜாவை போடலாம் என்று சொன்னேன். உடனே மாலையே எம்.ஜி.ஆர் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்று செய்தி வந்துவிட்டது. ’உன்னை விடமாட்டேன்’ என்ற அந்த படத்தை கே.சங்கர் இயக்கினார். இதை எம்.எஸ்.விஸ்வநாதன் எல்லோரும் தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள். நான் தான் இளையராஜாவை ரெக்கமண்ட் செய்தேன் என்று.

நான் யாரையும் வேண்டும் என்றும் சொல்லமாட்டேன் வேண்டாம் என்றும் சொல்லமாட்டேன். யாராவது யாரையாவது போட்டால் ரொம்ப சந்தோஷம் என்று சொல்வேனே தவிர குறுக்க நின்று தடுக்கும் வேலை எல்லாம் செய்யமாட்டேன். எம்.ஜி.ஆர் நடிக்கும் போது என்னாகிவிட்டது என்றால் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரு முதலமைச்சர் எப்படி படம் நடிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர். அந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டிய அப்போதைய கவர்னர் பட்டுவாரியர் அவரை வரவிடாமல் ஆக்கிவிட்டார்கள்” என்றார்.

மேலும், எம்.ஜி.ஆர் நடித்த ‘உன்னை விடமாட்டேன்’ படத்தின் முதல் பாடலை டி.எம்.எஸ் பாடி இளையராஜா ரெக்கார்டிங் செய்து கொண்டு எம்.ஜி.ஆரிடம் காண்பித்துள்ளார். அப்போது எம்.ஜி.ஆர் இது சரியில்லை வேறு யாரையாவது பாடச் சொல்லு என்று கூறியுள்ளார். அதன்பின்னர், இளையராஜா, மலேசியா வாசுதேவனை பாட வைத்து ரெக்கார்டிங் செய்து கொண்டு காண்பித்துள்ளார். அதையும் எம்.ஜி.ஆர் வேண்டாம் என்று சொல்லியுள்ளார். இதனால் குழப்பமடைந்த இளையராஜா, இப்ப நான் என்ன செய்வது என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது அவர் நீயே பாடிவிடு என்று கூறியுள்ளார்.

இளையராஜா பாடுவதற்கு தயங்கிய போது நீ பாடுன மாதிரி அவர்கள் எல்லாம் பாடினார்களா சொல்லு என்று கேட்டுள்ளார். அதற்கு இளையராஜா இல்லையென்று சொன்னதும் நீ பாடு என்று சொல்லியுள்ளார். அதற்கு இளையராஜா, நான் கிராமத்தில் இருந்து வந்தவன் நான் பாடினா அது உங்களுக்கு சேருமா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். நீ பாடு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இளையராஜாவை பாட வைத்து எம்.ஜி.ஆர் ஓகே செய்துள்ளார். 

தமிழச்சி கயல்விழி
 

Leave a Reply