இலங்கை வெள்ள நிவாரணம் - காலாவதியான பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
இலங்கை
இலங்கை வெள்ள நிவாரணத்திற்கு காலாவதியான பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.
இலங்கையில் திட்வா புயல் எதிரொலியாக பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை 390 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 352 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 432 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க, இலங்கை அரசுடன் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.
ஆபரேஷன் சாகர் பந்து என்ற பெயரில் இந்திய அரசு 53 டன் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கியுள்ளது.
மேலும், மீட்புப் பணிக்கான உபகரணங்களுடன் 80 NDRF வீரர்கள் அடங்கிய குழு விமானப்படை விமானத்தில் இலங்கை சென்றுள்ளது.
இதே போல், பாகிஸ்தானிலிருந்து உணவு பொருட்கள், அத்தியாவசிய முதலுதவி உபகரணங்கள், அவசர கால மருந்துகள், படகுகள், கூடாரங்கள், போர்வைகள் உடன் 45 பேர் அடங்கிய மீட்புக் குழு இலங்கை சென்றுள்ளது.
இதில் பாகிஸ்தான் அனுப்பிய பொட்டலங்கள் பல 2024-ம் ஆண்டு காலாவதியான தேதியுடன், பயன்படுத்த முடியாத நிலையில் இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இலங்கை அதிகாரிகள், பாகிஸ்தானிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளன.






















