• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

இலங்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலயினைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மண்சரிவு, கல் பிரள்வு ,வீடுகள் தாளிறக்கம் உள்ளிட்ட காரணங்களால் 261 குடும்பங்களைச்சேர்ந்த 917 பேர் இடம்பெயர்ந்து நான்கு நிலையங்கிளல் தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் எல்ஜின் மேற்பிரிவு>எல்ஜின் கீழ்ப்பிரிவு > ஊவாக்கலை ஆகிய பிரதேசங்களைச்சேர்நத சிறுவர்கள் முதியவர்கள் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் தங்கக்கலை இல 01 தமிழ் வித்தியாலயத்திலும் ஊவாக்கலை சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் , ஆலயம் ,கிறிஸ்துவ தேவாலயம் ஆகிய இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்கள் குடியிருக்கும் குடியிறுப்புக்களின் இரு பக்கங்களிலும் உள்ள பாரிய மலைகளில் இருந்து மண்சரிவு , கள்பிரள்வு, மலைகளில் ஏற்பட்ட வெடிப்பு போன்றன காரணமாக இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே குறித்த நபர்கள் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சமடைந்தவர்களுக்கு மூன்று வேளை சமைத்த உணவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை பிரதேசவாசிகள்,தோட்ட நிர்வாகம் ,கிராம சேவகர், இளைஞர் கழகங்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

இதுகுறித்து இவர்கள் கருத்து தெரிவிக்கையில் ஆங்கிலேயர் எமது முன்னோர்களை வெளியில் வராதவாறு எல்லைப்புரங்களில் ஆபத்தான இடங்களில் குடியிருப்புக்களை அமைத்து அவர்களை தங்கவைத்தனர்;ஆனால் தற்போதும் அதே நிலையில் அடிப்படை வசதிகளின்றி வாழவேண்டிய சூழ்நிலையே தற்போதுள்ள பரம்பரைக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களான ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் தாங்கள் குடியிருந்த வீட்டுப்பகுதிகளுக்கு மண்சரிவு ஏற்பட்டதாகவும் வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டதாகவும் ஒரு சில விடுகள் தாழிறங்கியதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் குறித்த பிரதேசங்களில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எப்போது வேண்டுமானாலும் மீரியாபத்தை போன்று அனர்த்தம் ஏற்பட்டலாம் என்றும் எனவே தாங்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன் தங்களை பாதுகாப்பான இடங்களில் வாழ்விடங்களை அமைத்து தருமாறு இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த தினங்களில் பெய்த கடும் மழையினால் குடியிருப்புக்களுக்கு செல்லும் வீதிகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதால் இவர்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வற்கும் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் வீதிகள் உடைந்து போயிள்ளதுடன் பல இடங்களில் மண்திட்டுக்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.
 

Leave a Reply