3 நாட்களில் ரிவால்வர் ரீட்டா படம் செய்துள்ள வசூல்..
சினிமா
மலையாளத்தில் அறிமுகமாகி அதன்பின் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இடம்பிடித்தவர் கீர்த்தி சுரேஷ்.
கதாநாயகியாக நடிப்பதை தாண்டி கதையின் நாயகியாகவும் அவ்வப்போது நடித்து வருகிறார். மகாநட்டி, ரகு தாத்தா, சாணி காயிதம் போன்ற படங்களில் சோலோ ஹீரோயினாக கலக்கிய கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாகியுள்ள படம்தான் ரிவால்வர் ரீட்டா.
டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதனால் வசூலிலும் இப்படம் அடிவாங்கியிருக்கிறது.
ஜே. கே. சந்துரு இப்படத்தை இயக்க ராதிகா சரத்குமார், சுனில், ரெடிங் கிங்ஸ்லி, சென்ட்ராயன் ஆகியோர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், ரிவால்வர் ரீட்டா படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ரிவால்வர் ரீட்டா 3 நாட்களில் உலகளவில் ரூ. 2.5 கோடி வசூல் செய்துள்ளது.






















