ரியோ ராஜ் நடிக்கும் ராம் லீலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
சினிமா
2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்த 'ஆண் பாவம் பொல்லாதது' படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் ரியோ ராஜ் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த படத்திற்கு "ராம் லீலா" என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் வர்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்






















