திருகோணமலை மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ள நிலமைகள்
இலங்கை
அதிகபடியான மழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் திருகோணமலை மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ள நிலமைகள் ஆரம்பித்துள்ளது.
அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் 22098 குடும்பங்களைச்சேர்ந்த 71944 நபர்கள் பாதிப்பு.532 வீடுகள் சேதம்.
காலை 7.00 மணி அளவில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் நடைபெற்றுவரும் அசாதரண காலநிலை காரணமாக 22098 குடும்பங்களைச்சேர்ந்த 71944 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தெரிவித்தார்
அதில் 17119 குடும்பங்களைச்சேர்ந்த 56858 நபர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதுடன் குறிப்பாக 4979 குடும்பங்களைச்சேர்ந்த 15086 நபர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
























