• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்

இலங்கை

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இன்று (4) வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் மூத்த அதிகாரிகள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது  வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.

திரும்பி வரும் தொழிலாளர்கள் தங்கள் தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்கவும், அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் தேவையான ஆதரவு மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் இதன்போது கூறினார்.

மேலும் முறையான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறையை உருவாக்குவதற்காக நாடு முழுவதும் 25 மாவட்டங்களில் இதுபோன்ற கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply