ஆம்... அப்போது இது தான் ஜெயலலிதா...!
சினிமா
எழுபதுகளில் ஜெயலலிதா, ' ஆனந்த விகடனில்' ஒரு கட்டுரை எழுதினார். அதில் தனக்கு நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து இருந்தார். ஒரு ரசிகர் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கடிதமாக எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்.
ஒரு கடிதத்தில், “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்... இந்த தேதிக்குள் சம்மதிக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன்...” என்று ஒரு தேதியை குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். ஜெயலலிதாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோல நிறைய கடிதம் வருகிறது. அதில் இதுவும் ஒன்று என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். சில நாட்கள் கழித்து மீண்டும், அதே நபரிடமிருந்து கடிதம்... மீண்டும் அதே புராணம்... “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்... இந்த தேதிக்குள் சம்மதிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்...” என்று மீண்டும் ஒரு தேதியைக் குறிப்பிடுகிறார்.
இப்போதும் ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை.... நாட்கள் நகர்கிறது... மீண்டும் அதே நபரிடமிருந்து கடிதம் வருகிறது... “என்னை திருமணம் செய்ய சம்மதியுங்கள்... இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்...” என்று.
அவருக்கு பதில் கடிதத்தை, இவ்வாறாக ஜெயலலிதா எழுதி இருக்கிறார், “எனக்கு கணவராக வர வேண்டியவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கூடியவராக இருக்க வேண்டும். மற்ற கொள்கைகளைவிட இது தான் முக்கியம்...சொன்ன வாக்கை மீண்டும் மீண்டும் மீறும் உங்களை எப்படி நான் மணக்க முடியும்...?”
ஆம்... அப்போது இது தான் ஜெயலலிதா...!
Chandran veerasamy























