ரீ-ரிலீஸ் ஆகிறது எம்.ஜி.ஆரின் இதயக்கனி!
சினிமா
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மிக முக்கியமான படங்களில் ‘இதயக்கனி’யும் ஒன்று. திண்டுக்கல் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்ற சமயத்தில் வெளியான படம் இது. படத்தின் ஆரம்ப காட்சியில் அதிமுக கொடியையும் இரட்டை இலைச் சின்னத்தையும் காட்டி இருப்பார்கள்.
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக இந்தி நடிகை ராதா சலூஜா நடித்திருந்தார். சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த படம். 1975 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.
“நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற”, “இன்பமே உன் பேர் பெண்மையோ”, “ஒன்றும் அறியாத பெண்ணோ”, “தொட்ட இடமெல்லாம்” போன்ற பாடல்கள் படத்தின் சிறப்பு அம்சம். ஏ.ஜெகநாதன் இயக்கியுள்ளார்.
அரசியல் வசனங்கள் ஆங்காங்கே தூவப்பட்ட ‘இதயக்கனி’, எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்துக்கு உந்துதலாக இருந்தது. பிரமாண்டமாக உருவான இந்தப் படம், பிரமாண்ட வெற்றியையும் பெற்றது.
50 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் வெள்ளிக் கிழமை ‘இதயக்கனி’ ரீ–ரிலீஸ் ஆகிறது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்த படத்தை உலக எம் ஜி.ஆர். பேரவை வெளியிடுகிறது.
https://thaaii.com/2025/07/02/idhayakkani-movie-release/
- பாப்பாங்குளம் பாரதி.






















