போலி அமெரிக்க டொலர்களுடன் ஒருவர் கைது
இலங்கை
மினுவங்கொடை நகரத்தில் அமைந்துள்ள ஒரு வங்கியில் ஆறு போலி 100 அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மினுவாங்கொடை பொலிஸாரின் அதிகாரிகளால் நேற்று பிற்பகல் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஸ்நாயக்கபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் மினுவங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























