வத்தளையில் 39 கிலோ கிராம் கஞ்சா மீட்பு
இலங்கை
வத்தளை, பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 39 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது ஆறு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.






















