• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்

இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 14 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது.

2023 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியது தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின் போது, ​​சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிந்துவிட்டதாகவும், அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

அதன்படி, குறித்த வழக்கை டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையின் போது சட்டமா அதிபரின் ஆலோசனையை நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.

2023 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸாரினால் வழக்கு தொடரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply