அமெரிக்காவில் நடந்த பயங்கரம் - கொல்லப்பட்ட தீயணைப்புவீரர்கள்
அமெரிக்காவின் வடக்கு இடஹோ பகுதியில் தீயணைப்புவீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சினைப்பர் தாக்குதலில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பலமணிநேரம் தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகின்றன.
கான்பீல்ட் மலைப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் சென்றவேளையே சினைப்பர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
எத்தனை பேர் தாக்குதலை மேற்கொள்கின்றனர் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உறுதியாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






















