பிரான்சில் கடற்கரை, பூங்காக்களில் புகை பிடிக்க தடை
பிரான்சில் புகை பிடிப்பதால் ஆண்டுதோறும் சுமார் 75 ஆயிரம் பேர் மரணம் அடைவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இதில் பெரும்பாலும் குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் புகை பிடித்தலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி கடற்கரை, பூங்கா, பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனை மீறுபவர்களுக்கு சுமார் ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை மந்திரி கேத்தரின் தெரிவித்துள்ளார்.






















