• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் கொடூர சம்பவம்! கணவர் பொலிஸில் சரண்

இலங்கை

வவுனியாவில் கணவனொருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

புளியங்குளம், நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியையான 32 வயதான ரஜூட் சுவர்ணலதா என்பவரே இவ்வாறு கணவனால் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன், மனைவியை கொலைசெய்து, நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கணவன்- மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாகவே குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, கணவன் மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply