One last Time - ஜன நாயகன் பட ஷூட்டிங்கின் கடைசி நாள்.. எமோஷனலான விஜய்
சினிமா
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. விஜய் நடிக்க வேண்டிய காட்சி பகுதிகளின் படப்பிடிப்பு பணிகள் இன்றுடன் முடிவடைந்துள்ளது. விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த படத்தின் அவருடைய பகுதி படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது.
இதனை படக்குழு மிக பிரம்மாண்டமாக அவருக்கு ஃபேர்வெல் பார்ட்டி கொடுத்து அனுப்பி வைக்க படக்குழு திட்டமிட்டது. அந்த விழாவில் படத்தில் நடித்த அனைவரும், தீவிர ரசிகர்கள் வைத்து இந்த விழாவை நடத்த வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது ஆனால் விஜய் அதனை தன்மையுடன் மறுத்துள்ளார். விஜய் சில நாட்களாக படப்பிடிப்பில் எமோஷனலாக இருந்தார் என கூறப்படுகிறது.
இதுவே அவரது கடைசி திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் இணையத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் டீசரை படக்குழு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






















