• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பீடி இலைகளுடன் ஒருவர் கைது

இலங்கை

நீர்கொழும்பு மாவட்டத்தில் துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபன பிரதேசத்தில் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று  (01) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு , பிட்டிபன பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 59 கிலோ கிராம் பீடி இலைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக துங்கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துங்கல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply