• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வாடகை சட்டங்களை அமுல்படுத்துமாறு கோரி போராட்டம்

கனடா

கனடாவின் மொன்ரியலில் வாடகை கட்டுப்பாட்டு சட்டங்களை அமுல்படுத்துமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

க்யூபெக் அரசாங்கத்திடம் வாடகை கட்டுப்பாட்டு சட்டங்களை அமல்படுத்தக் கோரி நூற்றுக்கணக்கானோர் மழையை பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டு உரிமையாளர்கள் நியாயமற்ற வகையில் செயற்பட்டு வருவதாக வாடகைக் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரையறைகள் இன்றி வாடகைத் தொகை உயர்த்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டு சந்தைகளை கருத்திற்கொள்ளாது மனிதாபிமான அடிப்படையில் வாடகைத் தொகைக் குறைக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளனர்.

வசதிகள் மற்றும் வீட்டு வாடகை பற்றிய புதுமுறை கணக்கீட்டுக் கோட்பாட்டை கடந்த மாதம் க்யூபெக் வீட்டு உள்கட்டமைப்பு அமைச்சர் பிரான்ஸ்-எலேன் டூரன்சோவ் அறிவித்திருந்தார்.

இந்த நடைமுறை, நுகர்வோர் விலை குறியீட்டு அளவீட்டை (CPI) மூன்று ஆண்டுகளின் சராசரியாக கொண்டு, வாடகை உயர்வில் நிலைத்தன்மையை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a Reply