• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் பரவி வரும் நோய் குறித்து எச்சரிக்கை

கனடா

கனடாவில் உண்ணி கடி நோய் பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதார நிபுணர்கள் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த நோய் தற்போது நாடின் பல புதிய பகுதிகளிலும் பரவி வருகிறது.

வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக இந்த நொய் பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் சுமார் 11000க்கு மேற்பட்ட நகராட்சிகளின் சில ஆயிரக் கணக்கான பகுதிகளில் இந்த நோய்ப் பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடா பொதுச் சுகாதார நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது

 • மேற்குக் கனடா: வான்கூவர் தீவு, ப்ரிட்டிஷ் கொலம்பியாவின் கடலோர பகுதி, மற்றும் மானிடோபாவின் பெரும்பாலான பகுதிகள் (வினிப்பெக் ஏரியின் வடகரையிலிருந்து அமெரிக்க எல்லை வரை).

• மத்திய மற்றும் கிழக்குக் கனடா: ஒண்டாரியோ மாநிலத்தின் கிரேட் லேக்ஸ் கடற்கரைகள், மற்றும் முழுமையான கிரேட்டர் டொராண்டோ பகுதி.

• செயிண்ட் லாரன்ஸ் நதி வழியாக: கிங்ஸ்டன், ஒட்டாவா, மொன்ரியல் போன்ற நகரங்கள்.

• அட்லாண்டிக் கனடா: நியூ பிரன்ஸ்விக் மற்றும் நோவா ஸ்கோஷியா மாநிலங்கள் முழுவதும், கேப் ப்ரெட்டன் தீவு உட்பட சில பகுதிகளில் இந்த ஆபத்து நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கறுப்புக் கால்கள் கொண்ட “பிளாக்லெக்டு டிக்” எனப்படும் உண்ணிகள் இப்பகுதிகளில் பெருகி வருவதாகவும், அவை லைம் நோய் பரப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply