• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையுடன் கொடி விற்பனை ஆரம்பித்து வைப்பு

இலங்கை

சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு  போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையும் கொடி விற்பனையும் இன்று (31)   வைபவ ரீதியாக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர் தலைமையில் சாய்ந்தமருது – 12 ஆம் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நடைபெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் ,  தொழிலதிபர் எம்.யூ.நியாஸ், தலைப்பிட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், நிதி உதவியாளர் ஏ.எம்.றியாஸ் உள்ளிட்ட அதிதிகள், சமுர்த்தி அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் கொடி விற்பனை நிகழ்வுகள் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட சகல கிராம சேவக பிரிவுகளிலும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டம் இன்று மே 31 முதல் ஜுன் 17 வரை இடம்பெறவுள்ளது.இதன் அங்கமாக போதைப்பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு எதிர்வரும் ஜுன் 04 ஆம் திகதி சாய்ந்தமருது வொலிவேரியன் கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெறவுள்ளது. இதில் சகல பெண்களும் கலந்து கொள்ளுமாறு பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் இதன் போது அழைப்பு விடுத்தார்.
 

Leave a Reply