முறைகேடாகக் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்
இலங்கை
கடந்த கால அரசாங்கங்களில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் சட்டத்தின் மூலம், இந்த நாட்டில் அரச சொத்துக்கள் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்பூர்வமாக அரசுடமையாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






















