திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மனைவியுடன் நடிகர் ஸ்ரீகாந்த் சாமி தரிசனம்
சினிமா
ரோஜாக்கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதை தொடர்ந்து பார்த்திபன் கனவு, கனா கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்னர் கோவிலில் இருந்த ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.























