• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து

இலங்கை

வாரியபொல, மினுவங்கெட்டே அருகே விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் K8 ரக பயிற்சி விமானத்திலிருந்து பாதுகாப்பாகத் தரையிறங்கிய இரண்டு விமானிகளும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என விமானப் படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர்களது நிலைமை பாரதூரமாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

UPDATS:

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 போர் பயிற்சி (ஜெட்) விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்லிருந்து புறப்பட்ட ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் குருநாகல் -வாரியபொல மினுவங்கேட் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
 

Leave a Reply