• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாளை வெள்ளித்திரையில் வெளியாகும் படங்கள்

சினிமா

நாளை திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை பற்றி இச்செய்தியில் பார்க்கலாம் வாங்க.

Trauma

நடிகர் விவேக் பிரசன்னா குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து மக்களுக்கு பரீட்சயமானார். இவர் நடித்த சேதுபதி, இறைவி, மாநகரம் போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்தது. இந்நிலையில் அடுத்ததாக டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா ட்ராமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஒரு மெடிக்கல் கிரைம் திரில்லாராக உருவாகியுள்ளது. இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

அஸ்திரம்

நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்." இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. து. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, அருல் தி சங்கர், ஜீவா ரவி மற்றும் ரஞ்சித் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தன ஷண்முகமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி இசைமயைத்துள்ளார். இவர் இதற்கு முன் ஐடா, 8 தோட்டாக்கள் மற்றும் பொம்மை நாயகி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை வெளியாகிறது.

பேய் கொட்டு

எஸ். லாவன்யா இயக்கி, நடித்து, தயாரித்து, ஒளிப்பதிவு, இசை என 31 திரைக்கலைகளையும் செய்து ஒரு உலக சாதனை படத்தி திரைப்படமாகும். இப்படத்தில் தீபா ஷங்கர், ஷாந்தி ஆனந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் நாளை திரையரங்கில் வெளியாகவுள்ளது.

என்னை சுடும் பனி

எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் படம், 'எனை சுடும் பனி'. இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார்.

கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம் சேவா. வெங்கட் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அருள் தேவ் இசை அமைக்கிறார். இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

ரீ-ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள்

பகவதி

2002 ஆம் ஆண்டு நடிகர் விஜய் மற்றும் ரீமா சென் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பகவதி திரைப்படம். இப்படமே நடிகர் ஜெய் அறிமுகமான திரைப்படமாகும். இவர்களுடன் வடிவேலு, ஆஷிஷ் வித்யர்தி, யுகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் இசையை தேவா மேற்கொண்டார். இப்படம் நாளை மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

பாஸ் (எ) பாஸ்கரன்

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா , நயன்தாராமற்றும் சந்தானம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. படத்தில் அமைந்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும். நண்பேண்டா என்ற சொல்லும் மிகவும் டிரென்ட் ஆனது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். திரைப்படம் நாளை மீண்டும் ரிலீஸ் ஆகிறது.

Leave a Reply