• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்திருந்தது

அதன்படி, ஆட்சேபனைகளைத் தெரிவிக்க இன்று பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது

இதேவேளை 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளதுடன் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த 3ஆம் திகதி தொடங்கியதாகவும், எக்காரணம் கொண்டும் இந்த இறுதி தினம் நீட்டிக்கப்படாது என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வதற்காக மாவட்டச் செயலக அலுவலகங்களில் வசதிகள் செய்யப்பட்டிருந்ததுடன் 2023 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் எண்பத்தாயிரத்து அறுநூற்று எழுபத்திரண்டு (80,672) வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply