• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கை

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏப்ரல் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தித்தாள் அச்சிடுவதற்கான காகிதங்களை வாங்கியதன் மூலம் 12 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறி, அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் இந்த வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

அர்ஜுன் அலோசியஸ் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு நேற்று வரை குற்றப்பத்திரிகைகள் வழங்கப்படவில்லை எனக்கூறினார்.

இதன்படி, வழக்கை ஏப்ரல் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் சந்தேகநபரிடம் குற்றப்பத்திரிகையை ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
 

Leave a Reply