• Welcome to TamilsGuide
செய்திகள் 1

5ஆம் ஆண்டில் வெற்றி கரமாக கால்பதிக்கும் தமிழ் FM

சினிமா

பழமை மாறாது பல புதுமையான விடயங்களை தினந்தினம் கொண்டுவரும் தமிழ் FM  வானொலி தனது 4 ஆவது ஆண்டு நிறைவையும் 5 ஆம் ஆண்டில் கால்பதித்ததையும் இன்று கொண்டாடியது.

புதிய டிஜிட்டல் உலகத்துக்கு ஏற்றுவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு ரசிகர்களுக்காக இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்களையும் சுமந்து 5 ஆம் அகவையில் கடந்த 15 ஆம் திகதி கால் பதித்தது.

குறுகிய காலத்தில் இரசிகர்களின் மனதை வென்று இலங்கையின் முன்னணி வானொலியாக திகழும் தமிழ் FM, ஒரே ஒரு தமிழ் யூத் ரேடியோவாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. தமிழ் FM  2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி தனது சேவையை ஆரம்பித்து, இன்றுடன் நான்கு வருடங்களாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து தமிழ் வானொலித்துறையில் கோலோச்சி பறக்கிறது.

தமிழ் வானொலித்துறையில் டிஜிட்டல் உலகத்துடன் கைக்கோர்த்து புத்தம் புதிய மாற்றங்களுடன், இரசிகர்களை மகிழ்விக்கும் பலவிதமான விடயங்களை சுமந்துவரும் தமிழ் FM,  வானொலி இன்று சமூக ஊடகங்களில் அசைக்க முடியாத சக்தியாகவும் திகழ்கிறது.

அந்த வகையில் தெமட்டகொடையிலுள்ள சுவர்ணவாஹினி கட்டடத்தில் இன்று காலை 11 மணியளவில் சமய நிகழ்வுகளுடன் தனது ஆண்டு நிறைவை வெகு விமர்சையாக கொண்டாடியது. தமிழ் FM அலைவரிசை பிரதானி ஹோசியா அனோஜன் தலைமையில் சுவர்ணவாஹினி ஊடக வலையமைப்பின் நிர்வாகிகள், ஏனைய சகோதர ஊடக அங்கத்தவர்களின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் FM  இன்று 4 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டி, ஆரவாரத்துடன் கொண்டாடியதுடன், பங்குபற்றிய அனைவருக்கும் இனிப்புகள் பரிமாறப்பட்டு, அனைவரின் ஆசிர்வாதத்துடன், 5 ஆம் ஆண்டில் கால் பதிதத்தை சிறப்பாக கொண்டாடியது தமிழ் FM வானொலி.

99.5 மற்றும் 99.7 அலைவரிசைகளினுடாக சிறந்த நிகழ்ச்சிகளையும் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்திகளையும் தமிழ் பேசும் மக்களுக்காக தொடர்ந்தும் தமிழ் FM வானொலி வழங்கிவருகின்றது.
 

Leave a Reply