• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மேஜை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த சிறுவர்கள் - 4000 பேருக்கு பணத்தை திரும்ப கொடுத்த ஹோட்டல் 

கனடா

ஷாங்காய் நகரில் உள்ள சீனாவின் மிகப்பெரிய உணவகத்தில், 17 வயது சிறுவர்கள் இருவர், உணவின் மீது சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதனால் உணவக நிர்வாகம் உடனடியாக மன்னிப்பு கோரி, 4000 பேருக்கு இழப்பீடு வழங்குவதாகவும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது.

மேஜை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த சிறுவர்கள்: 4000 பேருக்கு பணத்தை திரும்ப கொடுத்த ஹோட்டல் | Boys Who Urinated On The Food

ஷாங்காய் பொலிஸார்,  இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  உணவகம் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று உணவகத்தில் 4,100 ஆர்டர்கள் பெற்றிருந்த நிலையில்,  ஆர்டர் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பணத்தை திருப்பித் தருவதாக உணவக நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த உணவகமானது அதன் சிறந்த சேவை மற்றும் தரமான உணவுக்காக பிரபலமானது. சீனாவில் மட்டுமின்றி, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தனது கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த சம்பவம், உணவகத்தின் மதிப்பை பெரிதும் பாதிக்கக்கூடும் என்பதால், நிறுவனம் அவசர நடவடிக்கைகள் எடுத்து, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளது.
 

Leave a Reply