முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது
இலங்கை
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நேற்றிரவு (5) சிஐடி அதிகாரிகள் குழுவினால் பரத்தரமுல்ல, பெலவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
களனி பிரதேசத்தில் காணி ஒன்று தொடர்பில் பொய்யான ஆவணங்களை தயாரித்து பணத்தை அபகரித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.






















