PEDDI படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திலக் வர்மாவை பாராட்டி Bat பரிசளித்த ராம் சரண்
சினிமா
2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஹைதராபாத் திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து PEDDI திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ராம் சரணை சந்தித்து திலக் வர்மா வாழ்த்து பெற்றார். அப்போது திலக் வர்மாவுக்கு ராம் சரண் Bat ஒன்றை பரிசளித்தார்.
இயக்குநர் புச்சி பாபு இயக்கியுள்ள 'பெத்தி' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகவுள்ளது.























