• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மேர்வின் சில்வா காணி மோசடி விவகாரம் - மேலும் ஆறு பேர் கைது

இலங்கை

களனி பகுதியில் காணி ஒன்று தொடர்பில் போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேர்வின் டி சில்வா நேற்று (05) இரவு பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply