• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெடுந்தீவில் பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

இலங்கை

நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலையின்  அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இதன்போது பதாதைகளை தாங்கியவாறு கோஷம் எழுப்பி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெடுந்தேவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

குறித்த மதுபான சாலைக்கு அருகில் 100 மீற்றர் தூரத்தில் பாடசாலை, கோவில்கள் என்பன அமைந்துள்ளதால் அப்பகுதிக்கு மதுபான சாலை அனுமதி வேண்டாம் எனவும்  பொதுமக்கள்  வலியுறுத்தியிருந்தனர்.

இது தொடர்பில் ஏற்கனவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால் மதுவரித் திணைக்களம் தற்காலிக அனுமதி வழங்கியது.

குறித்த அனுமதியை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் பிரதேச செயலகம் மற்றும் மது வரித் திணைக்களத்திற்கு இடையில் இன்று பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த அனுமதியினை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் எனக் கோரிய குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply