பரதக் கலையின் ஆளுமைக்கு சிதம்பரஜோதி விருது.
கனடா
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் முதுநிலைத் தேர்வு நடுவரும் புகழ்பெற்ற முதுநிலை நடன ஆசிரியருமான மதிப்பார்ந்த பெருந்தகை கலாகீர்த்தி சாந்தினி சிவனேசன் அவர்கள் கால் நூற்றாண்டுக்கு மேலாக பரதக் கலைக்கு ஆற்றிய பணிக்காக சிதம்பரஜோதி என்னும் விருதினை இன்று தாயகத்தில் பெற்றுக்கொண்டார்கள்.
இவ்விருதினை பெற்றுக்கொண்ட கலாகீர்த்தி சாந்தினி சிவனேசன் அவர்களிற்கு அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.
நன்றி.
நாகராஜா விஐயகுமார் (சங்கர்)
தேர்வுப்பொறுப்பாளர்























