• Welcome to TamilsGuide
செய்திகள் 1

5 ஆண்டுகளின் பின் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வடகொரியா

5 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழகப்பட்டுள்ளது.

எனினும் , சுற்றுலா வருபவர்களுடன் உள்ளூர் வழிகாட்டி இருக்க வேண்டும், தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு ரஷ்யாவின் 100 சுற்றுலாப் பயணிகளுக்கு வடகொரியா அனுமதி அளித்தது.

தொடர்ந்து, சீனாவின் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தாண்டு அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply