ஸ்ரீனாத் இயக்கிய `லெக் பீஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது
சினிமா
உன்னாலே உன்னாலே, உத்தமபுத்திரன் மற்றும் ரௌதிரம் ஆகிய தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மனதில் பதிந்தவர் நடிகர் ஸ்ரீனாத். இவர் 2009 ஆம் ஆண்டு டேனியல் பாலாஜி நடிப்பில் வெளியான முத்திரை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கினார்.
அதைத்தொடர்ந்து சந்தானம் நடித்து பெரும் வெற்றியை பெற்ற வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தை இயக்கினார். தற்பொழுது அவரது 3- வது திரைப்படமான லெக் பீஸ் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் 5 ஆண்களை சுற்றி நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. படத்தில் யோகி பாபு, ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி மற்றும் ரமேஷ் திலக் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் சென்னையில் 30 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை மணிகண்டனின் ஹீரோ சினிமாஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.























