• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் பாதுகாப்பு துறையில் 5,400 பேர் பணிநீக்கம்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அதன்பிறகு பொருளாதாரம், நிர்வாகத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் சிக்கன நடவடிக்கையாக பல்வேறு துறையில் ஆட்குறைப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாட்டின் மிகப்பெரிய துறையான ராணுவத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்களில் 8 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் முதல்கட்டமாக தற்போது 5 ஆயிரத்து 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் வருடத்துக்கும் குறைவான அனுபவம் கொண்ட தகுதிகாண் நிலையில் உள்ளவர்கள் ஆவர். அதேசமயம் ராணுவ வீரர்களுக்கு இந்த பணிநீக்கத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வனத்துறையில் இருந்து 2 ஆயிரம் பேரும், உள்நாட்டு வருவாய் சேவை துறையில் இருந்து 7 ஆயிரம் பேரும் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

Leave a Reply