• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவுக்குள்ளிருந்து வேறொரு நாட்டுக்குள் பெருமளவில் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள்

பிரித்தானியா புலம்பெயர்ந்தோரையும் புகலிடக்கோரிக்கையாளர்களையும் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுகடத்த தீவிரமாக திட்டமிட்டுவரும் நிலையில், பிரித்தானியாவுக்குளிருந்து புகலிடக்கோரிகையாளர்கள் அயர்லாந்துக் குடியரசுக்குள் நுழைந்துவருவதாக அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
அயர்லாந்துக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்றாகும். முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருந்த பிரித்தானியா, பின்பு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. அதுதான் பிரெக்சிட் என அழைக்கப்படுகிறது.

என்றாலும், நிலப்பரப்பின்படி பார்த்தால், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான அயர்லாந்துக் குடியரசும், பிரித்தானியாவின் ஒரு பகுதியான வட அயர்லாந்தும் இணைந்தேதான் உள்ளன.

ஆக, வட அயர்லாந்திலிருந்து அயர்லாந்துக் குடியரசுக்குள் நுழைவது கஷ்டமான விடயம் அல்ல!

இந்நிலையில், அயர்லாந்துக் குடியரசுக்குள் ஏராளமான புலம்பெயர்வோரும், அகதிகளும் நுழைந்துவருவதாக அந்நாட்டின் நீதித்துறை அமைச்சரான ஹெலன் (Helen McEntee) தெரிவித்துள்ளார்.

அயர்லாந்துக்குள் நுழைவோரில் 80 சதவிகிதம் பேருக்கும் அதிகமானோர் பிரித்தானியாவிலிருந்துதான் வருவதாக ஹெலன் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்துக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதுடன், வீடுகள் பற்றாக்குறை பிரச்சினையும் உருவாகியுள்ளது, அந்நாட்டில் புலம்பெயர்தல் தொடர்பில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply