• Welcome to TamilsGuide
செய்திகள் 1

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஜேர்மனியில் உணவுப்பொருட்கள் விலை குறைந்தது

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்குப் பின், முதன்முறையாக ஜேர்மனியில் பணவீக்கம் குறைந்துள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஜேர்மனியில் உணவுப்பொருட்கள் விலை குறைந்துள்ளதுடன், எரிபொருள் விலையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் பணவீக்கம் 2.2 சதவிகிதம் குறைந்துள்ளது, உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையில் எதிரொலித்துள்ளது.
  
மார்ச் மாதத்தில், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது முதன்முறையாக உணவுப்பொருட்கள் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைத்தது. இது 2015 பிப்ரவரியை ஒப்பிடும்போது, முதன்முறையாக, 0.7 சதவிகிதம் குறைவாகும்.

குறிப்பாக, காய்கறிகள் விலை வெகுவாக குறைந்தது, சூரியகாந்தி எண்ணெய் பொன்ற சமையல் எண்ணெய்களின் விலையும் அதே அளவில் குறைந்ததுடன், பால் பொருட்கள் விலை 5.5 சதவிகிதம் குறைந்தது.

அதே நேரத்தில், மீன் மற்றும் கடல் உணவுகள் 0.9 சதவிகிதமும், ஜாம் மற்றும் இனிப்பு வகைகள் 8.4 சதவிகிதமும் விலை அதிகரித்தன.

ஆனால், கார்பன் வரி அதிகரித்த நிலையிலும், எரிபொருட்கள் விலை, முந்தைய ஆண்டைவிட, 2.7 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் விளைவாக வீட்டு உபயோகப் பொருட்கள் விலை 4.6 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply