• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் சென் ஜோண்ஸ் கல்லூரியின் தமிழ் விழா 2024

சினிமா

“மிகச் சிறப்பான ஒழுங்கமைப்புடன் நேர்த்தியான சிறந்த நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற யாழ் சென் ஜோண்ஸ் கல்லூரியின் தமிழ் விழா 2024”

யாழ் சென் ஜோண்ஸ் கல்லூரியின் தமிழ் விழா  மிகச் சிறப்பான ஒழுங்கமைப்புடன் நேர்த்தியான சிறந்த நிகழ்ச்சிகளுடன் 2024.04.08  ஆம் திகதி நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது.

இவ்வருடம் கல்லூரியின்  68 வது தமிழ் விழாவாகும். நீண்ட காலமாக தமிழ் விழாவினை நடாத்திவரும் கல்லூரிச் சமூகத்தினர் பாராட்டுகுரியவர்கள்.

நிகழ்ச்சித் தொகுப்பினை (அறிவிப்பாளர்) வழங்கிய மாணவர்கள் மிகச் சிறந்த முறையில் நிகழ்ச்சிகளை நகர்த்திச் சென்றமை பாராட்டுக்குரியதாகும்.

பல்லியம், குழு இசை, புல்லாங்குழல் இசை, மங்கல இசை, நடனம் போன்ற நிகழ்ச்சிகளில் வீணை, வயலின், புல்லாங்குழல், நாதஸ்வரம், ஆர்மோணியம், மிருதங்கம், தவில், கடம், கஞ்சிரா ஆகிய வாத்தியங்ளை கல்லூரி மாணவர்கள் வாசித்தமை பாராட்டுக்குரியதாகும்.

மேலே கூறப்பட்ட இசைக்கருவிகளுக்கான போட்டிகளுடன், இசை, நடனம், பேச்சுப் போட்டிகள் பாடசாலை மட்டத்தில் வருடா வருடம் நடாத்தப்படுகின்றமை பாராட்டுக்குரியதாகும். இவ்வருட தமிழ் விழாவில்  178 மாணவர்கள் பரிசில்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாணவர்களின் பல்லியம், குழு இசை, புல்லாங்குழல் இசை, மங்கல வாத்திய இசை,கோலாட்டம், வேடுவர் நடனம், பேச்சு, விவாத அரங்கு என மாணவர்களின் அனைத்து ஆற்றுகைகளும்  மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. மாணவர்களை வழிப்படுத்திய அனைத்து ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

இப்பாடசாலையிலிருந்து தமிழ் தினப் போட்டியில் வில்லிசைப் நிகழ்ச்சியில் பங்குபற்றி தேசிய நிலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் மோகனதர்சன்  அவர்கள்  கடந்த வருடம் வில்லிசை (செந்தமிழ் வில்லிசைக்குழு) அரங்கேற்றம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு மாணவர்கள் ஏனைய இசை, நடன இசைக்கருவிகளின் அரங்கேற்றங்களை  செய்வார்கள் என எதிர்பார்க்க முடியும்.

மிக அழகான முறையில் தமிழ் விழாவினை வருடாவருடம் நடாத்திவரும் பாடசாலையின் அதிபர்,   விழாவின் பொறுப்பாசியர்,  உப அதிபர்கள், மாணவர்களை வழிப்படுத்தும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டப்படவேட்டியவர்கள்.
 

Leave a Reply