• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நமது மண்ணில் இருந்து புலம் பெயர்ந்த உறவுகள் செறிவாக வாழும் நாடு கனடா. 

சினிமா

ஒரு தலைமுறையின் காலம் 33 ஆண்டுகள் என்றால்,இளமைப் பருவத்தில் இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்களது இரண்டாம் தலைமுறை கடந்து மூன்றாம் தலைமுறையும் அங்கு உருவாகியுள்ளது. அத்தலைமுறை கல்வியில் மட்டுமல்ல கலைகளிலும் சிறந்து விளங்குவதை நாம் அறிகிறோம். 

ஆனால் இத்திறமைகளுக்கு அங்கு வாழும் நம்மவர்கள் உரிய வரவேற்பினைத் தருகிறார்களா? என்பது கேள்விக்குறி. அத்தகைய சில உள்ளூர் கலைஞர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் தம் சொந்தப்பணத்தில் தென்னிந்தியா சென்று தமிழகத் தொலைக்காட்சிகளில் தோன்றி விட்டால் மட்டுமே, அவர்களுக்கு ஓரளவு அங்கீகாரம் கிடைக்கிறது. 

தென்னிந்தியத் திரை, மற்றும் தொலைக்காட்சி மூலம் பிரபலம் அடைந்தவர்களை பெரும் பொருட் செலவில் வரவழைத்து நிகழ்ச்சிகளை நடத்துவோர் பத்து நிகழ்ச்சிகளுக்கு ஒரு நிகழ்ச்சியையாவது, அங்குள்ள உள்ளூர் திறமைகளுக்காக நடத்தலாமே. 

இத்தகைய சூழலில்தான், கனேடியத் தமிழோசை வானொலி ஏற்பாடு செய்துள்ள ‘இசைக்குயில் 2024’ முழுக்க முழுக்க கனேடியத் தமிழ்க் கலைஞர்களுக்கு மட்டுமே களம் அமைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிகிறோம். 

எதிர்வரும் ஏப்ரல் 13, Canada Event Center ல் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி, கனடா வாழ் தமிழ் உறவுகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் என நம்புகிறேன். ‘நமது கலைஞர்களை நாமே கொண்டாடுவோம்’ என்ற உணர்வுடன் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தருவார்கள் எனவும் எதிர்பார்க்கிறேன். நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

B.H. Abdul Hameed

Leave a Reply