• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் 

சினிமா

ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது. 

சரோஜா தேவி செய்த ஒரு செயலால் படப்பிடிப்புக்கு மேக்கப் போட்டு கிளம்பிய எம்.ஜி.ஆர் திடீரென படப்பிடிப்புக்கு வராமல் மேக்கப் ரூமுக்கு சென்றுவிட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சென்ற கேட்டதற்கு சோபமாக பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் சார்பில், 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ஏ.வி.எம்.நிறுவனத்துடன் எம்ஜி.ஆர் இணைந்த முதல் திரைப்படமாக இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழுக்க முழுகக் ஒரு காதல் படத்தில் நடித்தது இது தான் முதல் முறை.

எம்.ஜி.ஆர் தனது ஆக்ஷன் காட்சிகளை விட்டுவிட்டு காதல் பக்கம் திரும்பியதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிததது. அதற்கு ஏற்றார்போல் ஏ.வி.எம் நிறுவனமும் பிரம்மாண்டமாக படத்தை எடுத்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, ஒருநாள், நாளை மாலை நான் கோயம்புத்தூருக்கு செல்ல வேண்டும். அதனால் காலையில் சீக்கிரம் வந்துவிடுகிறேன் எனக்கு முதல் ஷாட் எடுத்துவிட முடியுமா என்று கேட்க, இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தரும் ஓகே சொல்லிவிட்டார்.

மறுநாள் காலை சரோஜா தேவி சீக்கிரம் வர அவருக்கு முதல் ஷாட் வைக்கப்பட்டுள்து. அதன்பிறகு எம்.ஜி.ஆர் படப்பிடிப்புக்கு மேக்கப்புடன் தயாராக வர, யாரோ ஒருவர், சரோஜா தேவிக்கு முதல் ஷாட் வைக்கப்பட் விஷயத்தை அவரிடம் கூறியுள்ளார். பொதுவாக தனது படங்களில் காலையில் முதல் ஷாட் தனக்குதான் வைக்க வேண்டும் என்று நினைக்கும் எம்.ஜி.ஆர், இந்த விஷயத்தை கேள்விப்பட்டு கோபத்துடன் மீண்டும் மேக்கப் அறைக்கு சென்றுள்ளார்.  

இதனால் படக்குழுவினர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், படத்தின் தயாரிப்பாளரான ஏ.வி.எம். சரவணன், தனது உதவியாளரை அனுப்பி எம்.ஜி.ஆரிடம் பேச வைக்க, அவரோ கோபத்துடன் கத்தி அவரை வெளியில் அனுப்பியுள்ளார். அப்போது ஏ.வி.எம்.சரவணனை பேச சொல்லி அழைக்க, அவரு கோபமா இருக்காரு இப்போ நான் எப்படி பேச முடியும் என்று கேட்டு அவரும் போகவில்லை. சில மணி நேரம் கழித்து ஏ.வி.எம்.சரவணனிடம் வந்த எம்.ஜி.ஆர் என்ன முதலாளி இப்படி ஆகிடுச்சி என்று கேட்டுள்ளார்.

அப்போது சரவணன் சார் இதை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்ல, உங்களுக்குதான் எதுவும் தெரியாதுஃ. சரோஜா தேவிக்கு கூட தெரியாதா என்று கேட்டுள்ளார். அதன்பிறகு பரவாயில்லை என்று சொல்லி எம்.ஜி.ஆர் மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகியுள்ளார். அன்பே வா படப்பிடிப்பில் அன்று ஒருநாள் தான் பிரச்சனை வருவது போல் இருந்தது ஆனால் சரியாகிவிட்டது என்று சமீபத்திய பேட்டியில் ஏ.வி.எம்.சரவணன் கூறியுள்ளார்.

Mahesakumar Tavarayan

Leave a Reply