• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஷாங்காய் மாநாகர முதல்வரை சந்தித்தார் பிரதமர் தினேஸ் குணவர்த்தன - பழைய ஒப்பந்தத்தை தொடர கலந்துரையாடலில் இணக்கம்

இலங்கை

கொழும்புக்கும் சீனாவின் ஷாங்காய் நகரத்திற்கும் இடையிலான சகோதர நகர உடன்படிக்கை ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் அதனுடாக புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று சீனாவின் ஷாங்காய் மாநாகர முதல்வரை சந்தித்து நீண்டதொரு கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

உலகின் துறைமுக நகரங்களில் சீனாவின் ஷாங்காய் நகரம் முதலிடம் வகிக்கின்றது. எனவே எதிர்காலத்தில் சீனாவின் ஷாங்காய் நகருக்கும் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களுக்கும் இடையே வலுவான தொடர்பை ஏற்படுத்த இதன் போது இணக்கம் காணப்பட்டது.

கொழும்புக்கும் ஷாங்காய் நகரத்திற்கும் இடையிலான சகோதர நகர உடன்படிக்கை ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனுடாக பாரிய பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஷாங்காய் நகரம் கப்பல் போக்குவரத்தின் ஊடாக 49.5 மில்லியன் யுவான் நிதியை பெற்று முதலிடத்திலுள்ளது. இதிலிருந்து இலங்கை கற்கக்கூடிய பாடங்கள் ஏராளம் என்றும் கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

4.72 டிரில்லியன் யுவான் வருடாந்த உற்பத்தி வருமானம் கொண்ட ஷாங்காய் நகரம், உலகத் தரம் வாய்ந்த வர்த்தக மையமாகவும், நிதி பரிவர்த்தனைகளுக்கான மையமாகவும் விங்குவதாக பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தமது நகரம் அடைந்துள்ள அனுபவங்களை இலங்கைக்கு வழங்குவதாக ஷாங்காய் மாநகர முதல்வர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply