• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை பத்மினி. 

சினிமா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை பத்மினி. இன்று வரையிலும் இவரது பெயர் திரையுலகத்தில் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளது.

நடிப்பு, நாட்டியம், வசீகர தோற்றம் என தமிழ் சினிமாவின் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். பரதநாட்டியம் என்றாலே பத்மினி தான் என்று தனித்து விளங்கியவர்.

கதகளி, குச்சிப்புடி, பரதநாட்டியம், மோகினியாட்டம் போன்ற நடனக்கலைகளை முறையாக பயின்று தேர்ந்தவர் நடிகை பத்மினி.

இவரது சகோதரிகள் லலிதா, ராகினியும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள் தான். இவர்களை திருவாங்கூர் சகோதரிகள் என்று தான் அழைப்பார்கள்.

தனது 7 வயதிலேயே நாட்டிய அரங்கேற்றம் முடித்த பத்மினி, தனது 17 வயதில் கல்பனா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார் பத்மினி.

சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட பத்மினி, 59 படங்கள் சிவாஜியுடன் சேர்ந்து நடித்தார்.

சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் அப்போதைய சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம்.

இன்றளவிலும் ‘தில்லானா மோகனாம்பாள்’ பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலம்.

250 படங்களுக்கு மேல் நடித்த நடிகை பத்மினி, தனது நடனத்திற்காகவும், நடிப்பிற்காகவும் பல விருதுகளை அள்ளிக்குவித்தவர்.

ராமச்சந்திரன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட பின் அமெரிக்காவில் செட்டில் ஆனார் பத்மினி.

அங்கு நடன பள்ளி ஒன்றை நிறுவி, முறைப்படி பரதநாட்டியம் பயிற்றுவித்தார் பத்மினி.

பத்மினி மற்றும் ராமச்சந்திரன் தம்பதிக்கு ஒரே மகன், அவரது பெயர் பிரேம் ஆனந்த். மகனை வளர்ப்பதிலும், குடும்பத்தை பார்த்துக்கொள்வதிலும் கவனத்தை செலுத்தி வந்தார் நாட்டியப்பேரொளி நடிகை பத்மினி.

கடைசியாக இவர் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் நடிகை நதியாவுக்கு பாட்டியாக நடித்தார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

2006 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் நடிகை பத்மினி. தற்போது நடிகை பத்மினியின் ஒரே மகன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1986 ஆம் ஆண்டு வெளிவந்த “உதயம் பதின்ஜாரு’ என்ற  மலையாள படத்தில் நடித்த பத்மினியின் மகன், அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

தன்னுடைய தாயைப் போல சினிமாவில் பெரிய அளவில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் இவரால் நீடிக்கமுடியவில்லை.

பிரேம் ஆனந்த், உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் ஆங்கில பத்திரிக்கையில் பத்திரிகையாளராகவும், புகைப்பட கலைஞராகவும் வேலை பார்த்திருக்கிறார்.

Leave a Reply