• Welcome to TamilsGuide
செய்திகள் 1

22 வருடமாக கெத்து காட்டிய அஜித்தின் பிடிவாதத்தை உடைத்த 5 விஷயங்கள்

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் அவர்கள், தனக்கென ஒரு கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு வட்டத்திற்குள்ளேயே பயணித்து வருகிறார். ஆனால் தனது படங்களில் “என் வாழ்க்கை வட்டமோ! சதுரமோ அல்ல! நேர்கோடு! யார் வந்தாலும் கவலைப்படாமல் போய்க்கொண்டே இருப்பேன்” என்று தத்துவமழை பொழிவார் .
  
மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல், பொது வெளியில் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாது, தன் படத்தின் ப்ரோமோஷனிலும் கூட பங்கேற்காது கெத்து காட்டி வந்த அஜித்தை, மீடியாக்கள் பலவும் வறுக்க ஆரம்பித்து பின்பு கறுக்கி விட்டது.

விஜயகாந்தின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவரின் நண்பரின் இறப்பு என்றவுடன் முதல் ஆளாக போய் நின்றார் என்று பலவகையான அவதூறுகளை அள்ளி வீசியது.

திரைத்துறையில் இருந்தவர்கள் ஒரு சிலர், “ஒரு நடிகன் எங்கே போக வேண்டும்! போகக்கூடாது!” என்பது அவரவர் விருப்பம். அதில் தலையிட விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றனர்.

அஜித்திற்கு ஆதரவாக சிலர் பேசினாலும் வலைதளவிஷமிகள் பலரால் மக்களிடையே, அஜித்தை பற்றிய கருத்தும் புரிதலும் தவறாக பரப்பப்பட்டது.

அஜித் உண்மையிலேயே நல்ல மனிதர் தான். இவர் யார் வளர்ச்சியையும் கெடுத்ததாக இல்லை! இவரால் வாழ்ந்தவர்களே கோடி.

மீடியாவின் பார்வையிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் தற்காத்துக் கொள்ளவே அஜித் தன் பணியை மட்டும் செய்து, மீடியாவில் இருந்து ஒதுங்கினார் என்பது பலரும் நம்ப மறுக்கும் உண்மை. இப்படி நேர்மையாக இருந்த மனுசனை பேசிப் பேசியே மாற்றிவிட்டனர் இந்த சாகசகாரர்கள்.

இந்த உலகமும் சரி, காலமும் சரி நாம் எதை வெறுக்கிறோமோ அதை நமக்கு பரிசாக அளிக்கும். நாம் எதை விரும்புகிறோமோ அதை பறித்து நம்மை அழ வைக்கும். இந்த செயலை காலத்துடன் சேர்ந்து சிறப்பாக செயல்படுத்துகின்றனர் அஜித்தின் நல விரும்பிகள்.

கார்ப்பரேட் கம்பெனிக்கு பணம் பண்ண மாட்டார். ஆனால் விடா முயற்சியில் லைக்காவுடன் இணைந்தார். அதுமட்டுமா அஜித்தின் ஏகே 63 எனப்படும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தை தயாரிப்பது தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ். எனில் தெலுங்கு கம்பெனிக்கும் படம் பண்ண ஆரம்பித்து விட்டார்.

இதையெல்லாம் பான் இந்தியா மூவி என்கின்ற ஒரே வாக்கியத்தில் முடித்து விடுகின்றனர். அது மட்டுமா, படம் ஓடுதோ! இல்லையோ! தமிழில் தான் டைட்டில் வைக்க சொல்வார் அஜித். இப்போது டைட்டில் ”குட் பேட் அக்லி” என்று ஆங்கிலத்தில் வைத்துள்ளனர்.

நல்லா இருந்த மனுசரை இப்படி பேசி பேசியே மாற்றி விட்டனர் இந்த மீடியாக்கள். கடைசியா ஆடியோ லான்ச்சுக்கும் வரவச்சுருவாங்க போல. மாறிவரும் காலச் சூழலில் இந்த மாற்றம் தேவையானது தான். அஜித்திற்கும் அவரது ரசிகர்களுக்கும் நல்லது நடந்தால் சரி. 
 

Leave a Reply