• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காத்திருப்பேன் உனக்காக

கனடா

கனடாவில் வாழும் "காத்திருப்பேன் உனக்காக"திரைப்பட ,1500 க்கு அதிகமான மேடை கண்ட அலாவுதீன் நாடகப் புகழ் கே.வி.செல்வராஜா அவர்களுக்கு 21.02.24 பிறந்தநாள் வாழ்த்துகள்... உங்களுடன் இணைந்து பாரிஸ் பாலம் படைப்பகத்தினரும் வாழ்த்தி மகிழ்கிறார்கள்...
கே.வி.செல்வராஜா : ரவி செல்வராஜ் ( செல்வம் மாஸ்டர்) சிந்தனைச்செல்வன் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட மூத்த கலைஞர்  திரு.கே.வி.செல்வராஜா அவர்கள் பற்றிய மினிப்பார்வை .....
இவரது அப்பப்பா ஒரு அண்ணாவியார் தான்தோன்றி கவிராயர் நடிகர் (பபூன் கூத்து)
அதேபோன்று இவருடைய தாய்மாமன் திரு.தம்பு அவர்கள் நடிகர் அண்ணாவியார் 'சத்தியவான் சாவித்திரியில் (எமன் வேடத்தில் பிரபலமானவர்,
செல்வராஜா அவர்கள் 1947 ஆம் ஆண்டு பருத்தித்துறையில் பிறந்தவர்.
இவரது அப்பப்பா தாய்மாமன் ஆகியோரால் 1951
ஆண்டு 4 வயதில் குழந்தை நடிகராக மேடையேற்றப்பட்டவர்.
இன்றுவரை கலையில்  இயங்கிக் கொண்டிருக்கிறார்.
யாழ் பரமேஸ்வராக் கல்லூரியில் (இன்றைய பல்கலைக்கழகம் ) உயர் கல்வியை கற்ற இவர்.
பின்னர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியின் போது சங்கிலியன்,காசியப்பன், போன்ற நாடகங்களை எழுதி இயக்கி நடித்ததோடு காசியப்பன் நாடகத்துக்கு இவருக்கு விருதும் கிடைத்தது.
பூநகரியில் பாடசாலை ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் கடமையாற்றிய போது  1963 ஆண்டு உதயசூரியன் என்ற நாடக மன்றத்தை உருவாக்கி பல நாடகங்களை எழுதி இயக்கி நடித்து வந்த இவர்.
பின்னர் 1969 +1970 காலப்பகுதியில் தங்கச் செல்வம் நாடக மன்றத்தை உருவாக்கி பிரிந்த உறவு, இராஜத்துரோகி,  சமூகச்சுடர்,கண் திறந்தது, போன்ற நாடகங்களை எழுதி இயக்கி நடித்தார்.
1971 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகை சிந்தனைச்செல்வன் என்ற பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்தது.
நுவரெலியா வட்டக்கொட மகாவித்தியாலயத்திற்கு
கல்வி கற்பிக்க சென்றவேளை 1976 ஆண்டு இலங்கையில் தயாரான காத்திருப்பேன் உனக்காக திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.நடித்து பாராட்டும் பெற்றார்.
தொடர்ந்து 1979 ஆண்டு நெஞ்சுக்குத் தெரியுமா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
1978 தொடக்கம் 1982 வரை கோண்டாவில் வாகீஸ்வரி நாடக மன்றத்தில் அலாவுதீன் நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் ஊதியம் பெற்று நடித்தார்.
இவ் நாடகம் இலங்கை எங்கும் மேடையேற்றம் கண்டு 2000 ஆயிரம் மேடைகளை நெருங்கிய நாடகம் என்பது பலரும் அறிந்ததே...
பின்னர் தொழில் நிமித்தம் சிங்கப்பூர் சென்றவேளை 1984 வரை அங்கும் உள்ளூர் மேடை நாடகங்களில் நடித்தார்.
கனடாவில் 1985 ம் ஆண்டிலிருந்து கலோ இந்தியா தொலைக்காட்சியில் ஆத்மாவின் ராகங்கள் தொலைக்காட்சி தொடரை எழுதி இயக்கி நடித்தார்.
கனடிய முதல் தொலைக்காட்சியான தமிழமுதம் தொலைக்காட்சியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார் என்றும். அதேபோன்று கனடா மொன்றியல் தமிழ் வானொலியில் 2006 இருந்து இன்றுவரை பல துறைகளில் இயங்கி வருகிறார் என்றும் அறியமுடிகின்றது.
கனடாவிற்கு வருகைதரும் தென் இந்திய நாடகக் கலைஞர்களுடனும் இணைந்து பல நாடகங்களை நடித்துள்ளார்.குறிப்பாக Y.G.மகேந்திரன் நாடகக் குழுவினரின் நாடகங்களிலும். மற்றும் மேஜர் சுந்தர்ராஜன் அவர்களுடனும் இணைந்து நடித்து பாராட்டை பெற்றுள்ளார்.
கனடாவில் வகிர்தாலயா நாடக மன்றத்தை உருவாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.
இவரின் கலைச்சேவையறிந்து

நடிப்பிசைசெல்வம் என்ற விருது Y.G.மகேந்திரன் அவர்களாலும், நாடக இரத்தினம் என்ற விருது மேஜர் சுந்தர்ராஜன் அவர்களாலும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடிகமணி வீ.வீ.வைரமுத்து அவர்களின் பெயரால் வழங்கப்பட்ட விருதுடன் 
சமீபத்தில் திரு.செல்வராஜா அவர்களுக்கு கனடாவில் வாழ் நாள் சாதனையாளர் விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல சிறப்புகளை கொண்ட திரு.கே.வி.செல்வராஜா அவர்கள் 21.02.24 புதிய அகவையில் காலடி எடுத்து வைக்கிறார் அவர் உடல் உளநலத்துடன் நீடூழி வாழ உங்களுடன் இணைந்து பாரிஸ் பாலம் படைப்பகத்தினரும் பேரானந்த பெருக்கோடு வாழ்த்தி நிற்கிறோம்.. K.P.L. 21.02.25
கலையால் கலைசெய்வோம் கலைஞர்களை கனம் செய்வோம்

பாரிஸ் பாலம் படைப்பகம் பிரான்ஸ் 
 

Leave a Reply