• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிட்சர்லாந்தில் 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

சினிமா

எல்லை தாண்டி பயணிப்பதில் சில விதி மாற்றங்கள் உட்பட, சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டு, மே மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

உலக நாடுகள் பலவற்றைப்போல, சுவிட்சர்லாந்திலும் மே மாதம் 1ஆம் திகதி, தொழிலாளர் தினம் கொண்டாடப்பட உள்ளது. சுவிட்சர்லாந்தில், அது சர்வதேச பணியாளர்கள் தினம் மற்றும் மே தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும், அதே மே மாதம் 1ஆம் திகதி முதல், சுவிட்சர்லாந்தும், ஜேர்மனியும், பரஸ்பரம் மற்ற நாடுகளின் மோட்டார் வாகன ஓட்டிகள் தங்கள் நாட்டில் விதிமீறலில் ஈடுபடும் நிலையில், அவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளன.

மே மாதம் 2ஆம் திகதி: கஞ்சா பயன்பாடு சோதனை

மே மாதம் 2ஆம் திகதி முதல், சூரிச் மாகாணமும், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் கஞ்சா விற்பனையை சோதனை முறையில் அறிமுகம் செய்ய உள்ளது.

சுவிட்சர்லாந்தில் வரி செலுத்த கடைசி நாள், மார்ச் மாதம் 31ஆம் திகதி ஆகும். ஆனால், Bern மாகாணம், வரி செலுத்த கால அவகாசம் கேட்டிருந்ததால் அம்மாகாண மக்களுக்கு மே மாதம் 15ஆம் திகதி வரை வரி செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், Appenzell-Ausserrhoden, Luzern, Schwyz, St. Gallen, Uri, மற்றும் Valais மாகாணங்களிலும், மே மாதம் 30ஆம் திகதி வரிசெலுத்த கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply