• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சித்ரா வர்ணம் -  இசைப் பெருவிழா

கனடா

கனடாவில் இயங்கிவரும் 'ஆஹா' வானொலி நிலையத்தினர் தமது 3வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பெருமையுடன் நடத்தும்  'சித்ரா வர்ணம்' 

கனடாவில் இயங்கிவரும் 'ஆஹா' வானொலி நிலையத்தினர் தமது 3வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பெருமையுடன் நடத்தும்  'சித்ரா வர்ணம்' மாபெரும் இசை விழாவில்  (ON APRIL 27th, 2024 AT WHITBY EVENT CENTRE.)கலந்து கொள்ள  இந்தியாவின் 'சின்னக்குயில்' சித்திரா அவர்கள் தனது குழுவினருடன் கனடாவிற்கு வருகின்றார்.

இந்த இசைப் பெருவிழா தொடர்பான விபரங்களை அறிவிக்க 'ஆஹா' வானொலி நிலையத்தினர்  தமது அட்டகாசமான அறிவிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் ஆகியோர் சகிதம் நேற்று சனிக்கிழமை மாலை பிரம்டன் மாநகரில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பு நிகழ்வில் 'ஆஹா' வானொலி நிலையத்தின் அதிபர் அருண் மற்றும் அவரது துணைவியார் தலைமையில் பல கலைஞர்களும் விழா அனுசரணையாளர்களும் ( ஸ்பொன்சர்ஸ்) கலந்து சிறப்பித்தார்கள்.

மேற்படி சந்திப்பு நிகழ்ச்சிக்கு கனடா உதயன் ஊடகக் குழுமத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள. அங்கு உதயன் பிரதம ஆசிரியர் வாழ்த்துரை வழங்கி 'ஆஹா' வானொலி நிலையத்தினரைப் பாராட்டிச் சென்றார்.

Leave a Reply