• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லண்டன் SRS தமிழ் வானொலியின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா 

லண்டன் SRS தமிழ் வானொலியின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா  The Oxshott Village Centre, Surrey இல் 17/02/24 சனிக்கிழமை    மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் கலை,  இலக்கியத் துறையில் நீண்ட காலம் பணியாற்றிவரும் ஐவர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

நாடகம் மற்றும்  ஊடகத்துறையில் நீண்ட காலம் பணியாற்றி வரும் எனக்கும், மூத்த இசைக் கலைஞர் சங்கீத வித்துவான்  ஞானாம்பிகை பத்மசிகாமணி, ஈழத்து மெல்லிசைப் பாடகர் மா. சத்தியமூர்த்தி, வெற்றிமணி பிரதம ஆசிரியர் - ஓவியர் மு.க.சு. சிவகுமாரன், எழுத்தாளர் கலா சிறீரஞ்சன் ( பூங்கோதை) ஆகியோருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

SRS வானொலி உரிமையாளரும் இசைக்கலைஞருமான ரவிஷங்கர் தனது தந்தையார் இசைக்கலாமணி கலாபூஷணம் சங்கீத வித்துவான் ஐ. சங்கரநாராயணன் அவர்களின் ஞாபகார்த்தமாக இந்த விருதுகளை வழங்கினார்.

முள்ளியவளையில் இயங்கி வரும் உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகத்தின் மேம்பாட்டிற்கு உதவும் நிதியுதவி நிகழ்ச்சியாக நடைபெற்ற இவ்விழாவில் ஈழத்துப் பாடல்கள்,  சினிமாப்பாடல்கள், கர்நாடக இசை மற்றும் நடனம், நாடகம் என்பனவும் இடம்பெற்றன. பல்வேறு வயதினரும் மிக உற்சாகமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். 

SRS வானொலியில் பணியாற்றும் அனைவருமே தன்னார்வத் தொண்டர்கள். அவர்களையும் மேடையில் அழைத்து கெளரவம் செய்தது பாராட்டுக்குரியது.

Leave a Reply