• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுவரெலியா- தலவாக்கலை பகுதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

நுவரெலியா- தலவாக்கலை, கிரிமதி பகுதியில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்

அதன்படி நுவரெலியா வீதியில் பயணித்த லொறி வீதியை விட்டு விலகி 200 அடி பாறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மேலும் விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவி சாரதி ஆகியோர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply